முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாருதி-சுசூகி தரவரிசை சச்சின் முதலிடம்
மாருதி-சுசூகி வழங்கும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

198 புள்ளிகளுடன் சச்சின் முதலிடத்திலும் 180 புள்ளிகளுடன் தோனி 7வது இடத்திலும் உள்ளனர். 167 புள்ளிகள் பெற்று கௌதம் காம்பீர் 12வது இடத்திலும், 155 புள்ளிகளுடன் யுவ்ராஜ் சிங் 17வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சு தரவரிசையில் பிரட் லீ 196 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். முதல் 10 வீரர்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் ஒருவரும் இல்லை. 155 புள்ளிகள் பெற்று இஷாந்த் ஷர்மா 11வது இடத்தில் உள்ளார்.

ஸ்ரீசாந் 150 புள்ளிகள் பெற்று 12ஆவது இடத்திலும், ஆர்.பி.சிங் 18ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் அணி தரவரிசையில் 108 புள்ளிகளுடன் ஆஸ்ட்ரேலியா முதலிடத்தில் உள்ளது, தென் ஆப்பிரிக்கா 104 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் 99 புள்ளிகளுடன் இந்தியா 3ஆவது இடத்திலும் உள்ளது.
மேலும்
ஷோயப் அக்தர் மீது இறுகும் பிடி!
ஹாக்கி : மணிசங்கர் ஐயர் மீது அஸ்லாம் ஷெர் கான் கடும் தாக்கு!
இந்திய ஹாக்கி கூட்டமைப்பிற்கு சர்வதேச அமைப்பு நெருக்குதல்!
இந்திய அணியின் தோல்விக்கு நடுவர்களும் காரணம் : கர்வாலோ!
ஹாக்கி : துணைத் தலைவர் பத்ரா பதவி விலகல் : கில் மௌனம்!
கே.பி.எஸ். கில் நீக்கப்படவேண்டும் : முன்னாள் வீரர்கள்!