முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹெய்டன் குற்றம் சாட்டப்பட்டார்!
பிரிஸ்பேன் வானொலியில் ஆஸ்ட்ரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன், இந்திய வீரர் ஹர்பஜனை தீமை விளைவிக்கும் சிறு களைச்செடி என்று வர்ணித்ததாக எழுந்த சர்ச்சையில் ஹெய்டனை கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா குற்றம்சாட்டியுள்ளது.

கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியாவின் வீரர்கள் நடத்தை விதி எண் 9ன் படி எந்த ஒரு வீரரும் மற்ற வீரர்களைப் பற்றி மோசமான கருத்துகளை வெளிப்படையாக கூறுவது கூடாது.

இந்த விதியின் கீழ் ஹர்பஜன் குறித்த ஹெய்டனின் கருத்து தண்டனைக்குறியதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை விசாரிக்க கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான தண்டனையை அந்தக் குழு விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை இந்த விவகாரத்தை விவாதிக்க கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா அவசரக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஹெய்டன் விவகாரம் குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஹெய்டனுக்கு எந்த விதமான தண்டனை கிடைக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அபராதம் விதிக்கப்படலாம் என்று ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்
கோழி காய்ச்சலால் பூப்பந்துக்கு தட்டுப்பாடு?
பெங்களுர் ஓபனில் ஜான்கோவிச் பங்கேற்பு!
ஐசிசி தரவரிசை : இந்தியா 4வது இடம்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மாற்றங்கள்
ஒரு 7- 8 மாதத்தில் ஓய்வு பெறுவதாயிருந்தேன் - கங்கூலி
மைதானத்தில் வசை: தடைக்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை