முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அபராதம்
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணிக்கு விளையாடி வரும் போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு மான்செஸ்டர் கிளப் மேலாளர் அலெக்ஸ் ஃபெர்கூசன், 8000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.

பயிற்சியின் போது தொடர்ந்து செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் வேலையில் ஈடுபட்டதால் ஒழுக்கவாதியான அலெக்ஸ் ஃபெர்கூசன் இந்த அபராதத்தை விதித்ததாக பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன.

கால்பந்து பயிற்சியின் போது வீரர்கள் செல்பேசிகளை உள்ளே வைத்து பூட்டி விடவேண்டும் என்று ஏற்கனவே நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான ஒழுக்க விதிகளை ஏற்படுத்தியுள்ள சர்ச்சைக்குறிய மேலாளரான ஃபெர்கூசன், வீரர்களின் சிறு சிறு ஒழுங்கினங்களைக் கூட விட்டு வைப்பதில்லையாம், அதற்கெல்லாம் கூட அந்த இடத்திலேயே 2000 பவுண்டுகள் வரை அபராதம் விதித்து விடுகிறார் என்கின்றனர் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
மேலும்
ஆஸி. வீரர்களுக்கு ஐ.பி.எல். இறுதி கெடு!
கபிலுக்கு ஓய்வூதியம் பி.சி.சி.ஐ. மறுப்பு!
சைமன் டாஃபல் விலக முடிவு?
மெல்போர்ன் ஒருநாள் : ஆஸி.யை 5 விக்கெட்டுகளில் வென்றது இந்தியா!
மெல்போர்ன் ஒருநாள் : இந்தியாவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பீஜிங்கில் சுற்றுச்சூழல் திருப்தி அளிக்கிறது : சர்வதேச ஒலிம்பிக் குழு!