முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > விளையாட்டுச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை மாரத்தான் : கென்ய வீரர் கேலை மீண்டும் சாம்பியன்!
ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் மும்பை மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நடப்பு சாம்பியனான கென்ய வீரர் ஜான் கேலை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்!

42 கி.மீ. தூரம் கொண்ட இந்த மும்பை மாரத்தான் ஓட்டத்தை, கடந்த ஆண்டு 2 மணி 12 நிமிடம் 27 விநாடிகள் கடந்து சாம்பியன் பட்டத்தை வென்ற கேலை, இ‌ந்த ஆ‌ண்டு 2 மணி நேரம் 12 நிமிடம் 3 விநாடிகளில் கடந்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல பெண்களுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் எத்தியோபியா ‌வீரா‌ங்கனை முலு செபோகா 2 மணி 30 நிமிடம் 3 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2005, 2006 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற செபோகா, இந்த வெற்றியுடன் சேர்த்து 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார்.
மேலும்
நாடு ‌திரு‌ம்‌பினா‌ர் ப‌க்ன‌ர்!
கு‌ம்ளே 600 ‌வி‌க்கெ‌ட்!
உலக கால்பந்து தரவரிசை: அர்ஜென்டினா முதலிடம்!
ஹா‌‌க் ‌மீதான கு‌ற்ற‌ம்சா‌ற்று வாப‌‌ஸ்!
ஒலிம்பிக் ஜோதியை ஏந்தும் இந்திய பெண்!
கும்ளேயிடம் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு!