நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » 20 நக்சலைட்டுகள் பலி; துணை ராணுவப்படை அதிரடி! (20 Naxalites Killed in Encounter With Crpf)
சட்டீஸ்கர் மாநில தாந்தேவாடாவின் அடர்ந்த காடுகளில் நேற்று இரவு நடந்த சண்டையில் 20 நக்சலைட்டுகள் துணை ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சண்டையில் துணை ராணுவப்படையினரில் 6 பேர் காயம்டைந்தனர்.

பீஜப்பூர் மாவட்டத்தில் ஜகர்குண்டா, பசகுடா என்ற நக்சல் ஆதிக்கப்பகுதிகளுக்கு இடையே நக்சல் பகுதி என்று அடையாளம் காணப்படாத பகுதியில் இந்தச் சண்டை நடந்தது.

சுமார் 300 சி.ஆர்.பி.எf. ஜவான்களும் உள்ளூர் போலீசாரும் தாக்குதல் தொடுத்தனர். அதாவது 3 முனைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இதுவரை 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதில் காயங்களுடன் பிடிபட்ட இரண்டு மாவோயிஸ்ட்கள் வான் மார்க்கமாக ராய்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

சிந்தல்நாருக்கு மிக அருகே உள்ள இந்த சண்டை நடந்த இடத்தில்தான் 2010 ஏப்ரல் மாதம் 75 துணை ராணுவப்படையினரை நக்சல்கள் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Feedback Print