நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » மமதாவுக்கு பின்னடைவு: சிங்கூர் நிலம்: டாடாவுக்கு சாதகமான தீர்ப்பு! (Unwilling Farmers Will get Back Their Land: Mamata)
FILE
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சிங்கூர் நிலம் தொடர்பான வழக்கில் விவசாயிகளுக்கு நிலத்தைத் திரும்ப வழங்க மமதா அரசு உருவாக்கிய சிங்கூர் நிலச்சட்டம் செல்லாது என்று கொல்கட்டா உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பினாகி சந்திர கோஷ், மிரிணால் கான்டி சவுத்ரி தனது தீர்ப்பில் கூறுகையில் இத்தகைய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறவேண்டும். ஆனால் மேற்குவங்க அரசு ஒப்புதல் பெறத் தவறிவிட்டது என்று கூறியுள்ளார்.

ஆனாலும் இந்த தீர்ப்பின் பலனை நடமுறை படுத்த 2 மாத காலம் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம், ஏனெனில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மமதா அரசின் சிங்குர் நிலச்சட்டம் செல்லும் என்று இதற்கு முந்தைய தீர்ப்பை தற்போது இந்த நாட்டாமை மாற்றியுள்ளார்.

டாடா மோட்டார்சுக்கு 997 ஏக்கர்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டது. நேனோ கார் தயாரிப்பிற்காக மேற்குவங்க அரசு இந்த நிலங்களை வழங்கியது.

தற்போது மேற்குவங்க அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இதற்கிடையே மமதா கூறுகையில் நாங்கள் விவசாயிகள் பக்கம் நிற்கிறொம் அவர்களுக்கு அந்த நிலம் திரும்ப வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்தத் தீர்ப்பு குறித்து கூறிய சி.பி.எம். கட்சியின் சூரிய காந்த மிஸ்ரா, "அவர் போட்ட சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று நாங்கள் தொடருந்து கூறிவந்தோம், மேலும் இருப்பினும் அந்த நிலச் சட்டத்தை எப்படி அமைக்கவேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கினோம்" என்றார்.
மேலும் படிக்க
Feedback Print