நாடும் நடப்பும் | த‌மிழக‌ம் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள்
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » குஜராத் கட்ச் பகுதியில் நிலநடுக்கம்! (5.1 Magnitude Earthquake Jolts Gujarat)
ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவான நிலநடுக்கம் இன்று குஜராத் முழுதும் உணரப்பட்டது. ஆனால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

இன்று மதியம் 1.44 மணியளவில் கட்ச் மாவட்டத்திற்கு அருகே இதன் மையம் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் பூஜ், ராபார், பாவ்னகர், ஜாம்னகர், அகமதாபாத் மற்றும் பிற ஊர்களிலும் உணரப்பட்டது.

முதலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் பிறகு சற்றே அதிகமாக குலுக்கிய நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த 5.1 அளவு நிலநடுக்கத்திற்குப் பிறகு 27 முறை பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு மிகப்பெரிய பூகம்பத்தை சந்தித்த கட்ச் பகுதியில் கட்டிடங்கள் லேசாக குலுங்கிய பீதியில் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி தெருக்களுக்கு ஓடிவந்தனர்.
மேலும் படிக்க
Feedback Print