ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு: இளைஞர் கைது

அம்பாலா, புதன், 9 நவம்பர் 2011 (16:47 IST)

ராகுல் காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவுகளை அனுப்பி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பெண் நிர்வாகிகளுக்கும், இளைஞர்களுக்கும் ராகுல் காந்தி பெயரிலான பேஸ்புக் கணக்கில் இருந்து கடந்த சில தினங்களாக தகவல்களும், உத்தரவுகளும் அனுப்பப்பட்டன.

ஆனால் அதில் இடம் பெற்றிருந்த வாசகங்கள், பெண் நிர்வாகிகளுக்கு சந்தேகத்தை எற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவரிடம் இது குறித்து புகார் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில்சைபர் கிரைம் போலீசார், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர்.

இதில்அம்பாலா மாவட்டத்தில் உள்ள நரைங்கார்க் என்ற இடத்தில் இருந்து தகவல்கள் அனுப்பப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அங்கு 2 நாட்கள் முகாமிட்டு போலீசார் நடத்திய விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ஆங்கிட் (19) என்ற இளைஞர்தான், ராகுல்காந்தி பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி தகவல்கள் அனுப்பி வந்த விவரம் தெரிய வந்தது.

இதையடுத்து ஆங்கிட் கைது செய்யப்பட்டார்.இவர் பி.ஏ. முதலாமாண்டு மாணவர் ஆவார்.

அவரிடம் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.பின்னர் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆக்கிட் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

Cricket Scorecard

Widgets Magazine
Widgets Magazine

அ‌ண்மை‌ச் செ‌ய்‌திக‌ள்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பாஜக வேட்பாளருடன் பேசி மாட்டிக்கொண்ட பாபா ராம்தேவ் - காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார்

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக சாமியார் பாபா ராம்தேவும், பாஜக வேட்பாளரும் பேசும் வீடியோ ...

MH370 தேடல் பணிகள் நெருக்கடியான கட்டத்தில்

காணாமல்போன மலேசிய விமானத்தை தேடும் பணிகளின் தற்போதைய கட்டத்தை ஒருவார காலத்துக்குள் முடித்துக் ...

நாடு‌ம் நட‌ப்பு‌ம்

உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

நரேந்திர மோடியின் ஆக்ரோஷமான பிரச்சாரம், ஊடகங்கள், ஊழல்கள் என்று காங்கிரசிற்கு எதிராக நிறைய சென்று ...

ஆதாரமில்லாமல் அவிழ்த்து விடும் அரைவேக்காடு அரசியல்

நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ...

Widgets Magazine