தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » காவல் துறையை எச்சரித்து மாவோயிஸ்ட் சுவரொட்டிகள் (Maoist poster warning police in Orissa)
Bookmark and Share Feedback Print
 
பழங்குடியினரை துன்புறுத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று காவல் துறையினரை எச்சரித்து ஒரிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் மாவோயிஸ்ட்டுகள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

ஒரிசா மாநிலத்தின் கஞ்சம், கஜப்பட்டி, கந்தமால் மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்து அலுவலகங்களிலும், கடை வீதிகளிலும், பேருந்துகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல் துறையினர், அவைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவைகளை மாவோயிஸ்ட்டுகள் ஒட்டியவைதானா என்று விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காந்தமால் மாவட்டத்திலுள்ள மைகான்ஞா, மந்த்ராபாஜூ, ஜாஜ்பூர் மாவட்டதிலுள்ள கலிங்கா நகர் ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் பழங்குடியினர் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல் துறையினர், இப்பகுதிகளில் கூடுதலாக காவல் படையினர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கஞ்சம் மாவட்டத்தின் வனப் பகுதியில்உள்ள பரகாடா எனுமிடத்திலும் சுவரொட்டிகள் மிக அதிக அளவிற்கு ஒட்டப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்