ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு இன்று நடைபெற்றுவரும் முதற் கட்ட வாக்குப் பதிவில் மதியம் 1 மணி வரை 35 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் 26 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு உள்ளதால், வன்முறைச் சம்பவங்கள் ஏதுமின்றி அமைதியாக வாக்குப் பதிவு நடைபெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.