தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » முல்லை‌ப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டும் திட்டமில்லை : அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் (Mullai Periyar : No plan to built a new Dam - Minister)
Feedback Print Bookmark and Share
 
முல்லைப் பெரியாறு நீர்த் தேக்க‌ப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான வன ஆய்வு மேற்கொள்ள கேரளா அரசிடமிருந்து எந்த திட்டமும், வனங்கள் (பாதுகாப்பு) சட்டப்படி பெறப்படவில்லை எ‌ன்று ம‌த்‌திய சு‌ற்று‌ச்சூழ‌ல் ம‌ற்று‌ம் வன‌த்துறை அமை‌ச்ச‌ர் ஜெ‌ய்ரா‌ம் ரமேஷ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து‌ப் பே‌சிய அமை‌ச்ச‌ர் ஜெ‌ய்ரா‌ம் ரமேஷ், பெரியார் புலிகள் சரணாலயத்தின் 92,500 ஹெக்டேர் பரப்பில் 2.5 ஹெக்டேர் பரப்பில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

16.09.2009 தேதியன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரிய நிலைக் குழுவின் 16-வது கூட்டத்தின் பரிந்துரைக்கு ஏற்பவே இந்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியானது சில நிபந்தனைகளை பின்பற்றுவதற்கு உட்பட்டதாகும்.

ஆயினும் முல்லைப் பெரியாறு நீர்த் தேக்க பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான வன ஆய்வு மேற்கொள்ள கேரளா அரசிடமிருந்து எந்த திட்டமும், 1980-ம் வருடத்திய வனங்கள் (பாதுகாப்பு) சட்டப்படி பெறப்படவில்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்