புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை வரும் ஜனவரி மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த கேரள மாநில அரசு மறுப்பதோடு, அந்த அணைக்கு பதிலாக புதிய அணை ஒன்றை கட்டவும் முயற்சி செய்து வருகிறது.
புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன `பெஞ்ச்' முன்பு இன்று ஆய்வுக்கு வந்தது.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி மாதம் 19-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.