நல்பாரி: அஸ்ஸாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தில் நேற்று உலஃபா தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் இயக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
காலை தொடங்கி மாலை வரை 12 மணி நேர பந்த் காரணமாக, அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இம்மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதோடு, வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த முழுஅடைப்பு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.