தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » மதுகோடா ஊழலில் காங். தலைவர்களுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும் : தேஜகூ (Probe Congress, RJD hand in Koda scam: NDA leaders)
Feedback Print Bookmark and Share
 
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவின் ஊழலில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஞ்சியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை வலியுறுத்திய பா.ஜனதா மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, இந்த ஊழலில் மதுகோடா ஒரு நடிகர் மட்டுமே என்றும், அதன் தயாரிப்பு மற்றும் இயக்கம் எல்லாம் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி - தான் என்றும் கூறினார்.

மதுகோடா ஊழல் இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெங்கையாவுடன் இருந்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கூறுகையில்,மதுகோடா ஊழல் விசாரணையை பலவீனமாக்கிவிடக்கூடும் என்று அச்சம் தெரிவித்தார்.

அரசியல் இலாபங்களுக்காக காங்கிரஸ் கட்சி ஊழல்களை பயன்படுத்திக்கொள்கிறது என்றும்,மதுகோடா ஊழல் அரசியலில் ஒரு கரும்புள்ளி என்றும் அவர் மேலும் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்