முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » போபர்ஸ் : குவாட்ரோச்சி குறித்து தகவல் தெரிவிக்க சிபிஐ மறுப்பு (Bofors case: CBI refuses to reveal information on Quattrocchi under RTI)
போபர்ஸ் : குவாட்ரோச்சி குறித்து தகவல் தெரிவிக்க சிபிஐ மறுப்பு
புதுடெல்லி , ஞாயிறு, 22 நவம்பர் 2009( 16:12 IST )
போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சிக்கு உள்ள தொடர்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்க மத்திய புலனாய்வு துறையான சிபிஐ மறுத்துவிட்டது.
போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் உறவினர் குவாட்ரோச்சி மீதான வழக்கை முடித்துக் கொள்வது என சிபிஐ அண்மையில் முடிவு செய்தது.
இது குறித்த தகவலை சிபிஐ, நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து எதிர்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில் வழக்கறிஞர் அஜய் அகர்வால் என்பவர்,போபர்ஸ் ஊழல் வழக்கில் குவாட்ரோச்சிக்கு உள்ள தொடர்பு குறித்து விவரம் தெரிவிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிபிஐ - யிடம் விண்ணப்பித்திருந்தார்.
ஆனால் போபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணை இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்,குவாட்ரோச்சி குறித்து தகவல் தெரிவிக்க சிபிஐ மறுத்துவிட்டது.