திபெத்திய பௌத்த மதத் தலைவர் தலாய் லாமா, சீனாவின் எதிர்ப்புகளையும் மீறி 4 நாள் பயணமாக இன்று அருணாச்சலப்பிரதேசத்தின் டவாங் நகருக்கு வந்து சேர்ந்தார்.
74-வயதான தலாய் லாமா குவஹாத்தியிலிருந்து அருணாச்சலிற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அவர அருணாச்சல் முதல்வர் டோர்ஜீ காண்டுவும் மற்ற அமைச்சர்களும் வரவேற்றனர்.
14-வது தலாய் லாமாவான இவர் 300 ஆண்டுகால பழமை வாய்ந்த டவாங் மடாலயத்தில் தங்கவுள்ளார். அங்கு அவர் பவுத்த தத்துவ உரையாற்றவுள்ளார்.
இதற்கு முன்னால் 1959ஆம் ஆண்டு அருணாச்சலத்திற்கு தலாய் லாமா வந்தார். இப்போது வருகை தந்ததைய்டுத்து 40 ஆண்டுகள் கழித்து இவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாச்சலத்தில் உள்ள திபெத்தியர்களும், இந்தியர்களும் தலாய் லாமாவின் வருகையை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.