ரயில்வே பணித் தேர்வுக்குழு தலைவர்களை நீக்க மம்தா உத்தரவு
ஞாயிறு, 8 நவம்பர் 2009( 10:17 IST )
ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது நியமிக்கப்பட்ட அனைத்து ரயில்வே பணி நியமன வாரியத்தின் தலைவர்களை நீக்குமாறு ரயில்வே அமைச்சர் மம்தா பேனர்ஜீ உத்தரவிட்டுள்ளார்.
ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்திற்காக புதிய தலைவர்கள் பட்டியலை மம்தா இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்தார். இதன் படி 20 ஆர்.ஆர்.பி. தலைவர்கள் நீக்கப்பட்டுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 20 நகரங்களில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உள்ளது. இதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக கடந்த சில நாட்களாக புகார்கள் வந்துள்ளன. மேலும் தேர்வு வினாத்தாள் வெளியே வருவது குறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.
இதனால் ஏற்கனவே உள்ள தலைவர்களை நீக்க மம்தா உத்தரவிட்டுள்ளார்.