மராட்டிய மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் சவான் தலைமையிலான 38 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.
மும்பையில் மராட்டிய ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அசோக் சவான் முதலமைச்சராகவும், 26 பேர் முக்கிய அமைச்சர்களாகவும், 11 பேர் துணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். ஆளுநர் எஸ்.சி. ஜமீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மராட்டிய மாநில சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ், தேசியவாதிகள் காங்கிரஸ் கூட்டணி 143 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.