தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » பா.ஜ.க. புதிய தலைவர் பதவியேற்றதும் அத்வானி விலகுவார்: ஆர்.எஸ்.எஸ். (Advani will quit after new president takes over BJP - RSS)
Feedback Print Bookmark and Share
 
தனது பிறந்தநாளான நாளை அரசியலில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை அத்வானி வெளியிடுவார் என்ற ஊகம் நிலவிவரும் நிலையில், பாரதிய ஜனதாக் கட்சிக்கு புதிய தலைவர் பொறுப்பேற்றதும் அவர் அரசியலில் இருந்து விலகுவார் என்று இராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் தெரிவித்துள்ளது.

“பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக உள்ள ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் டிசம்பரில் முடிகிறது. அதன் பிறகு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டு அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்பதற்கு ஜனவரி இறுதியாகிவிடும். புதிய தலைவர் பொறுப்பேற்றதும், ஏற்கனவே முடிவு செய்ததற்கிணங்க அத்வானி அரசியலில் இருந்து விலகுவார்” என்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில் இராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலைமை செயற்குழு உறுப்பினரும் அவ்வமைப்பின் பேச்சாளருமான ராம் மாதவ் கூறியுள்ளார்.

டிசம்பரில் ராஜ்நாத் சி்ங்கின் பதவிக்காலம் முடிந்ததும், அடுத்தத் தலைவரை தேர்வு செய்யுமாறும், தலைமை மாற்றத்தை மென்மையாக முடித்துவிட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்ளுமாறும் ஆர்.எஸ்.எஸ். தலைமையால் அத்வானி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்