பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நீடித்து வரும் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நடவடிக்கையின் ஒருபகுதியாக தனது முதன்மைச் செயலாளர் வி.பி. பாலிகரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார் முதல்வர் எடியூரப்பா.
கர்நாடக மாநிலத்தில் ரெட்டி சகோதரர்கள் தலைமையிலான எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க முதல்வர் எடியூரப்பா, அவரது முதன்மைச் செயலாளர் வி.பி.பாலிகர் உட்பட பலரை மாற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீடித்து வரும் பிரச்சினைக்கு சமரசத் தீர்வு காணும் முயற்சியாக எடியூரப்பா தனது முதன்மைச் செயலாளரை பணியிட மாற்றம் செய்துள்ளார்.
பாலிகருக்குப் பதில் ஐ.எஸ்.என்.பிரசாத் முதன்மைச் செயலாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.