கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா அமைச்சரவையில் பெண் அமைச்சராக உள்ள ஷோபா கரன்ட்லாஜே, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் தாம் பதவி விலகத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
பெங்களூருவில் பி.டி.ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், கட்சிக்கு நேர்மையான தொண்டராக தாம் இருந்து வருவதாகவும், கட்சி விரும்பும்பட்சத்தில் தாம் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார் என்றும் கூறினார்.
எடியூரப்பாவிற்கு மிகவும் நெருங்கியவராகக் கருதப்படும் ஷோபாவை அமைச்சரவையில் இருந்து விலக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ள ரெட்டி சகோதரர்கள் ஏற்கனவே வலியுறுத்தினார். ஆனால் ஷோபாவை பதவியில் இருந்து விலக்க முதல்வர் எடியூரப்பா மறுத்து விட்டார்.
இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரெட்டி சகோதரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
கர்நாடக பிரச்சினை தொடர்பாக பாஜக மேலிடம் இன்று புதுடெல்லியில் மேற்கொண்ட ஆலோசனையில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.