பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா, சிறையில் இருந்து விடுதலைக்குப் பின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்கு தயாராகி உள்ளார்.
கற்பழிப்பு வழக்கில் அகுஜா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நின்றுபோன பிரிதிஷ் நந்தி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் `ஏக் ஆக்சிடென்ட்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த ஷெட்யூலை அகுஜா நிறைவு செய்வார் என்று தெரிகிறது.
தற்போது டெல்லியில் ரகசிய இடத்தில் இருக்கும் அகுஜா, இம்மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அபிஜித் சவுத்ரி `ஏக் ஆக்சிடென்ட்' படத்தை இயக்குகிறார். சோஹா அலிகான், ஜூஹி சாவ்லா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
மும்பையில் தனது வீட்டு வேலைக்காரப் பெண்ணைக் கற்பழித்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கைதான அகுஜா தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.