கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவிற்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக நடைபெற்ற கட்சியின் மேலிடத் தலைவர்கள் கூட்டம் முடிவு ஏதும் எட்டப்படாமல் முடிந்தது.
என்றாலும் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறினார்.