தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » பேச்சுவார்த்தைக்குத் தயார் - மாவோயிஸ்டுகள்
Feedback Print Bookmark and Share
 
கொல்கட்டா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரவாதிகள் நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் தான் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக துணை ராணுவப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், `மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க மாட்டோம். ஆயுதங்களை கைவிட்டு அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்' என பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்