தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » பொதுத்துறை நிறுவனங்களின் 10% பங்குகள் மக்களுக்கு விற்பனை (Public to hold 10 per cent in all listed PSUs; Govt. to continue holding majority stake)
Feedback Print Bookmark and Share
 
இலாபமகராக இயங்கி வரும் பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் 10 விழுக்காடு பங்குகளை பொதுமக்களுக்கு கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது.

புதுடெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எவ்வித நஷ்டமும் இன்றி லாபகரமாக இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் ப. சிதம்பரம் கூறினார்.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் பொதுமக்களை ஈடுபடுத்துவதற்கான அரசின் விருப்பத்தை கடந்த ஜூலை மாதத்தில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அரசு அறிவித்ததைச் சுட்டிக்காட்டிய ப. சிதம்பரம், நாட்டின் சொத்துக்களில் ஒரு பகுதி மக்களின் கைகளில் சென்றடைய வேண்டும் என்றார்.

அரசின் வசம் 51 விழுக்காடு பங்குகள் இருக்கும் என்றார் அவர்.

நடப்பு ரஃபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதன்படி கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு கூடுதலாக 20 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 100 ரூபாயாக வழங்கப்படும்.

பார்லி-க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 70 ரூபாயும், பருப்பு வகைகள் மற்றும் சாப்ளவருக்கு தலா 30 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரம் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்