சட்டவிரோதமாக சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக் கூறி வழக்கு தொடரப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதுகோடா, அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பியதும், அவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பண மோசடி சட்டத்தின் கீழ் மதுகோடாவையும், அவரது உதவியாளர்களையும் ஓரிரு நாட்களில் அமலாக்கப்பிரிவினர் கைது செய்வார்கள் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.