தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » அருணாச்சல் அருகே படைகளை குவிக்கிறது சீனா (China amasses troops along Arunachal)
Feedback Print Bookmark and Share
 
அருணாச்சல் பிரதேசத்தையொட்டியுள்ள இந்திய எல்லை அருகே சீனா தனது படைகளை குவித்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கவுகாத்தியில் இன்று நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். ஜாக் இத்தகவலை தெரிவித்தார்.

அருணாச்சல் பிரதேசத்தில் சீன இராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைவதாக புகார் எழுந்துள்ள நிலையில்,சீனாவின் இந்த இராணுவ குவிப்பு குறித்த தகவலை ஜாக் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் சீனாவின் இந்த படை குவிப்பும்,பயிற்சியும் வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மேலும் பல இராணுவ அதிகாரிக்ள் மற்றும் துணை இராணுவப் படை அதிகாரிகள்,ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த தங்களது கருத்துக்க்ளையும்,அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்