மராட்டியத்தில் 48 மணி நேரத்தில் புதிய அரசு: காங். உறுதி
மும்பை, புதன், 4 நவம்பர் 2009( 16:08 IST )
மராட்டிய சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஆளுநர் ஜமீர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இன்னும் 48 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்கும் என காபந்து முதல்வர் அசோக் சவான் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே இலாகா பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் மராட்டியத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், இன்று அளுநர் ஜமீரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சுபாஸ் தேசாய், “இலாகா பங்கீட்டில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே நிலவும் இழுபறியால், புதிய அரசு அமைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. மராட்டியத்தில் புதிய அரசு அமையும் சூழல் எதும் தென்படவில்லை” என்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஆளுநர் ஜமீர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அடுத்த 48 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்படும் என காபந்து முதல்வர் அசோக் சவான் இன்று தெரிவித்தார்.