தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » மார்ச், ஏப்ரலில் பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து: குலாம் நபி ஆசாத் (Vaccine for Influenza-A H1N1 will be ready by March-April :AZAD)
Feedback Print Bookmark and Share
 
பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் தயாராகிவிடும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் இன்று நடந்த பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய குலாம் நபி ஆசாத், “பன்றிக் காய்ச்சல் தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் இந்திய தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் முன்னேறிய நிலையில் உள்ள” என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுரைப்படி, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் சுகாதார ஆய்வுக்கு என தனி துறை துவக்கப்பட்டுள்ளதாகவும், பன்றிக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியை கண்டறியும் பணியில் அது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

அதுமட்டுமின்றி, பன்றிக் காய்ச்சல், நீரிழிவு நோய் உள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுக் கருவிகளையும் குறைந்த விலையில் தயாரிக்கும் பணியில் சுகாதார ஆய்வுத் துறை ஈடுபட்டுள்ளதாக ஆசாத் தெரிவித்தார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்