தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மதவெறியின் வெளிப்பாடு: ப.சிதம்பரம் (Babri Masjid demolition is an act of religious fanaticism: Chidambaram)
Feedback Print Bookmark and Share
 
பாபர் மசூதி இடிப்பு சம்பவம் மதவெறியின் வெளிப்பாடு எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மதவாதம் எந்த வகையில் இருந்தாலும் அது வருந்தத்தக்கது என்றார்.

உத்தரப்பிரதேசத்தின் தியோபந்த்தில் உள்ள ஜமியாத் உலமா-ஐ-ஹிந்த் பயிற்சிக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய போது இதனைத் தெரிவித்த ப.சிதம்பரம், சிறுபான்மையின மக்களை பாதுகாப்பது அந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கடமை என்றும், மதத்தின் பெயரில் வன்முறைப் பாதையை தேர்வு செய்வதை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மதவாதத்தின் வெளிப்பாடுகள் அனைத்தும் வருந்தத்தக்கது என்றாலும், மதவாத வன்முறைகளை ஏற்படுத்துதே மிகக் கொடுமையானது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்