தீவிரவாதியை சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு போலீஸ் அதிகாரி பதவி
திங்கள், 2 நவம்பர் 2009( 16:34 IST )
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் ஜம்மு அருகே உள்ள கால்சியான் கிராமத்தில் வீட்டிற்குள் புகுந்த லஷ்கர்-ஈ-தோய்பா தீவிரவாதியை சுட்டுக்கொன்ற ருக்சானாவுகு காவல்துறையில் அதிகாரி பதவியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.
ருக்சானா என்ற பெண் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று தனது வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகளில் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவனை சுட்டுக்கொன்றார்.
அந்தப் பெண்ணின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு போலீஸ் அதிகாரி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, ரஜோரி பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் சவுகத் வட்டாலி இன்று தெரிவித்தார்.
ரக்சானா தவிர, அவருடைய தம்பி அய்ஜாஸ் மற்றும் மாமா உசேன் ஆகியோருக்கும் போலீசில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.