நக்ஸலைட்டுகளுக்கு முடிவு கட்டுவோம்- சட்டீஸ்கர் முதல்வர்
திங்கள், 2 நவம்பர் 2009( 12:51 IST )
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் தீவிரவாதத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம் என்று அம்மாநில முதல்வர் ராமன் சிங் கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, சட்டீஸ்கர் கடந்த 2000ஆவது ஆண்டில் புதிய மாநிலமாக உதயமானது.
அதன் 9-ஆவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ராமன் சிங், மாநிலத்தில் நக்சலைட்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மாநில ஆளுநர் நரசிம்மையா, மனித வளங்களும், இயற்கை வளங்களும் நிறைந்துள்ள சட்டீஸ்கர், வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்று என்று கூறினார்.