சென்னை: சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக, 162 சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இதன்படி முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி சிறப்பு ரயில் சென்ட்ரலில் இருந்து நவம்பர் 18 முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 3.40-க்கு கொச்சுவேலி சென்று சேரும்.
கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து நவம்பர் 19 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.20 மணிக்கு சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்க உள்ளது.
சென்னையில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சுற்றுலா ரயில், வேன்களை நவம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி, தினமும் இயக்கவுள்ளது.
இதற்கான கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 1,800. சிறியவர்களுக்கு ரூ. 1,400.
இதற்கு முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய ஐ.ஆர். சி.டி. சி . தக வல் மைய தொலைபே சி எண் - 044- 64594959, 9003140681.
பம்பைக்கு சிறப்பு விரைவு பஸ்கள்: இதே போல சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பம்பைக்கு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் 40 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.அ