முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாக். திட்டம்: ப.சிதம்பரம் (Pak plans to push terrorists to create mayhem in India: Chidambaram)
பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்ய பாக். திட்டம்: ப.சிதம்பரம்
புதுடெல்லி, ஞாயிறு, 25 அக்டோபர் 2009( 13:37 IST )
லஷ்கர், ஜெய்ஷ்-இ-முகம்மது, ஹிஸ்புல் பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்து அதன் மூலம் வன்முறைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எனினும், அதுபோன்ற சதிகளை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அவர், மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தான் அரசுக்கு இல்லை என்றார்.
பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும், இது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும் விரைவில் பரவும் அபாயம் உள்ளதாகவும் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.