தீமையை நன்மை வென்று தர்மத்தை நிலைநாட்டுவதைக் குறிக்கும் தசரா பண்டிகை நேற்று நாடு முழுவதும் வழக்கமான, பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜையின் கடைசி நாளான நேற்று மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களிலும், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜையையொட்டி துர்க்கை அம்மனின் உருவச் சிலைகள் ஆங்காங்கே உள்ள நதிகள், கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கும் வைபவங்களும் நடைபெற்றன.
டெல்லியில் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற ராம் லீலா நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, இராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவ பொம்மைகளை தீயிட்டு எரிக்கும் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.