தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » தேசியச் செய்திகள் » இணைந்த இந்தியாவே காந்தி, ஜின்னாவின் கனவாக இருந்தது : ஜஸ்வந்த் (Jinnah, Gandhi dreamt of federal India : Jaswant singh)
 
இணைந்த இந்தியாவே மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னாவின் கனவாக இருந்தது என்று முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான ஜஸ்வந்த் சிங் எழுதி சமீபத்தில் வெளியான " ஜின்னா : இந்தியா - பிரிவினை - சுதந்திரம் " என்ற தலைப்பிலான புத்தகம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என்று அதில் கூறியுள்ள ஜஸ்வந்த் சிங், ஜின்னாவையும் வெகுவாக புகழ்ந்திருந்தார்.

அவரது இந்த கருத்து பா.ஜனதாவுக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்,கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஜஸ்வந்த் சிங்.

இந்நிலையில், தமது இந்த புத்தகத்தை பாகிஸ்தானில் வெளியிடுவதற்காக விரைவிலேயே இஸ்லாமாபாத் செல்ல திட்டமிட்டுள்ள ஜஸ்வந்த் சிங், இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் இந்தியா, பாகிஸ்தானிலிருந்து துண்டிக்கப்படாமல் இருந்திருந்தால், சர்வதேச சக்தியாக உருவெடுத்து இருக்கும் என்று ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

'இணைந்த இந்தியாவே' மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னாவின் கனவாக இருந்தது என்றும், ஆனால் அதனை நாம் பிரித்து விட்டோம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால இந்தியா குறித்து, குறிப்பாக மதச்சார்பின்மை குறித்து நேரு கண்ட கனவு இன்னும் உணரப்படாமலேயே உள்ளது என்றும் ஜஸவந்த் சிங் அதில் தெரிவித்துள்ளார்.

இவை தவிர மேலும் பல பிரச்னைகள் மற்றும் விடயங்கள் குறித்தும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ள ஜஸ்வந்த், 2002 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப் போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள் இருந்ததாக ஒரு எண்ணம் ஏற்பட்டது என்பதை மறுத்துள்ளார்.

அப்போதைய டெல்லிக்கான அமெரிக்க தூதரக அதிகாரியால் கிளப்பி விடப்பட்ட கருத்து அது என்றும் ஜஸ்வந்த் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்