முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயம் இல்லை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயம் இல்லை
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படாது என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

மக்களவையில் இன்று 2009-10ஆம் நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்து பேசுகையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் சொத்து என்றும், அவற்றை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.

அவை பொதுத்துறை நிறுவனங்களாக தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள வேறு முக்கிய அம்சங்கள் வருமாறு:

டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 472 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது 2 ஆயிரத்து 112 கோடி ரூபாயாக இருந்தது.

இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி) மற்றும் புதிய ஐஐடி-க்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 2113 கோடியாக இருக்கும்.

துணை ராணுவப்படையினருக்கு சுமார் ஒரு லட்சம் குடியிருப்பு வசதிகள் கட்டப்படும்.

நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) செலவினம் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 12 லட்சம் பேருக்கு ஜூலை மாதம் முதல் புதிய ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.

சிறுபான்மை அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக 120 கோடி ரூபாய் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நீலகனி, அந்நிறுவனத்தின் வாரியத்தில் இருந்து விலகிய பின் இந்த திட்டத்தின் தலைவராக இருப்பார்.

தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான தேசிய நடவடிக்கை திட்டத்தின் கீழ் 8 தேசிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அவற்றில் ஒரு திட்டமான தேசிய கங்கை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 562 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 257 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பு அளிக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்களை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி முழுவதும் மானியமாக வழங்கப்படும். இதன் மூலம் 5 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள்.

சிறுபான்மையினர், எஸ்.சி/ எஸ்.டி பிரிவைச் சேர்ந்த பெண்கள் தேசிய கல்வித் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படும். கிராமப்புற பெண்களில் 50 விழுக்காட்டினர் சுய உதவிக் குழுக்களின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

ராஷ்டிரிய மகிளா கோஷ் எனப்படும் மகளிர் குழுக்களுக்கான நிதி தற்போதுள்ள 100 கோடியில் இருந்து 500 கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.

தேசிய வீட்டுவசதி வங்கி மூலம் கிராமப்புற வீடுகளுக்கான நிதி 2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வேளாண் கடன் இலக்கு ரூ 3.25 லட்சம் கோடி
ரயில்வே துறைக்கு ரூ. 5,000 கோடி கூடுதல் நிதி
வேளாண் துறைக்கு ஆண்டுக்கு 4 % கூடுதல் நிதி
2009-10 ஆண்டிற்கான நிதி அறிக்கை: பிரணாப் முகர்ஜி தாக்கல்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: பாஜக கோரிக்கை
வருண் காந்தி உயிருக்கு ஆபத்து: பிரதமருக்கு மேனகா கடிதம்