இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு செலவிடப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
2009-10ஆம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யத் துவங்கியுள்ளார்.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் காரணமாக இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2008-09ஆம் ஆண்டில் குறைந்துள்ளது என்று பிரணாப் கூறினார். உலகப் பொருளாதாரப் பின்னடைவு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் குறைந்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க எல்லா வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
இந்தப் பக்கம் இடுகைகள் கூட்டப்படும்போது தானாகவே புதுப்பித்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நிதி நிலை அறிக்கையின் மற்ற முக்கிய அம்சங்களாவன:
உயிரி எரிபொருள் (பயோ டீசல்) மீதான இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது.
ஆட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் நூலிழைகளின் மீதான உற்பத்தித் தீர்வை ஏற்கனவே இருந்த 8 விழுக்காடு மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுடைய உயர்நிலை பணியாளர்களுக்கு அளிக்கும் கூடுதல் சலுகைகளின் மீதான வரி (எஃப்.பி.டி) ரத்து செய்யப்படுகிறது.
பெட்ரோலில் ஓடும் கார்களின் மீதான உற்பத்தித் தீர்வை குறைக்கப்படுகிறது.
தொலைக்காட்சிகளில் எல்சிடி பேனல்கள் மீதான இறக்குமதி தீர்வை குறைக்கப்படுகிறது.
வணிக முத்திரையுடன் கூடிய நகைகள் மீது விதிக்கப்பட்ட உற்பத்தித் தீர்வை ரத்து.
உணவு எண்ணெய் மீதான தீர்வையில் மாற்றமில்லை.
சட்ட ரீதியான ஆலோசனைகளுக்காக பெறப்படும் ஊதியத்தின் மீதும் சேவை வரி விதிக்கப்படும்.
வருமான வரி படிவங்களை சரிபார்க்க மையமான ஒரு அலுவலகம் உருவாக்கப்படும்.
தனிநபர் வருமான வரியின் மீது வசூலிக்கப்பட்டு வந்த பத்து விழுக்காடு மிகை வரி (சர்சார்ஜ்) ரத்து செய்யப்படுகிறது.
புதிதாக இந்திய தொழில்நுட்பக் கழகங்களை (ஐஐடி) அமைக்க ரூ.450 கோடி ஒதுக்கீடு.
பொருட்கள் வர்த்தகத்தின் மீது விதிக்கப்படும் வரி (கமாடிடி டிரான்ஸாக்சன் டாக்ஸ்) ரத்து செய்யப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படும்.
ஊரக குடியிருப்பு கட்டுமானத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவின் பாதுகாப்பிற்கான ஒதுக்கீடு ரூ.1,41,703 கோடியாக அதிகரிப்பு.
அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை மீது 100 விழுக்காடு வரிவிலக்கு.
தொலைக்காட்சி செட் டாப் பாக்ஸ் மீதான இறக்குமதி தீர்வை 5 விழுக்காடாக நிர்ணயிப்பு.
நேரடி வரி வருவாய் தொகுப்பில் இருந்து அளிக்கப்படும் வரிப்பங்கு 58 விழுக்காடாக உயர்வு.
அயல்நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் இறக்குமதி தீர்வை அதிகரிப்பு.
பருத்தி துணிகளின் மீதான உற்பத்தி தீர்வை ஏற்கனவே இருந்த நான்கு விழுக்காடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
|