முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மே. வங்கம்: பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மே. வங்கம்: பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் மினிபேருந்து ஒன்று மேம்பாலத்தில் இருந்து ரயில்வே தண்டவாளத்தில் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஹவுராவில் இருந்து நஸீர்கஞ்ச் என்ற இடத்திற்கு அந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தன.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹவுரா ரயில் நிலையத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஹரியானா டி.எஸ்.பி.-யாக சந்தீப் சிங் நியமனம்
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம் தொடங்கியது
உத்தராகண்ட் விபத்து: குடியரசு தலைவர் இரங்கல்
கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்