முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ஹரியானா டி.எஸ்.பி.-யாக சந்தீப் சிங் நியமனம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹரியானா டி.எஸ்.பி.-யாக சந்தீப் சிங் நியமனம்
இந்திய ஹாக்கி அணியின் தலைவர் (கேப்டன்) சந்தீப் சிங் ஹரியானா மாநில காவல்துறையில் டி.எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த மாநிலத்தில் அடங்கிய ஷாபா என்ற இடத்தைச் சேர்ந்தவர் சந்தீப்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஹாக்கிப் போட்டிகளில் அவரது சிறப்பான சாதனைகளைப் பாராட்டி சந்தீப் சிங்கை நியமித்திருப்பதாக முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் இதனை அறிவித்த ஹூடா, ஹரியானா காவல்துறையில் பல்வேறு விளையாட்டுத் துறையினர் ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

விளையாட்டுத் துறையினரை ஊக்கப்படுத்தும் வகையில் பல சலுகைகளையும் ஹரியானா அரசு அளித்திருப்பதாகவும், இதனால் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஹரியானா மாநில அரசின் புதிய விளையாட்டுக் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று கூறிய அவர், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் இருந்த திறமையானவர்களை தேர்வு செய்யும் வகையில் அது இருக்கும் என்றார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ கூட்டம் தொடங்கியது
உத்தராகண்ட் விபத்து: குடியரசு தலைவர் இரங்கல்
கேரளா: பேருந்து கவிழ்ந்து 3 பேர் பலி
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு