உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று இருவேறு பேருந்து விபத்துகளில் 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதீ பாட்டீல், உத்தரகாசி, தேஹ்ரி மாவட்டங்களில் நிகழ்ந்த விபத்துகளில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அம்மாநில ஆளுநர் பி.எல். ஜோஷிக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.
விபத்துகளில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடையவும் தாம் வேண்டிக் கொள்வதாக அதில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். |