கேரள மாநிலம் புனலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து, சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்ததில் அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்ந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டதாகவும், காயம் அடைந்தவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும், புனலூர் தாலுகா மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்குள்ளான பேருந்து புனலூரில் இருந்து கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நேரிட்டது.
|