முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மைசூர் பந்த்: ஓரளவுக்கு பாதிப்பு
கர்நாடக மாநிலம் மைசூரில் பாஜக இளைஞர் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பு அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே மசூதி தாக்குதலுக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து மைசூர் புறநகர்ப்பகுதியான உதயகிரியில் பதற்றம் நீடித்தது.

மைசூரில் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டன. சில தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

வன்முறை மற்றும் கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பாக சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்து ஜாக்ரன் வேதிகா என்ற அமைப்பின் சார்பில் மைசூரில் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

பாஜக-வைச் சேர்ந்த வாஜித் என்ற இளைஞர் நேற்று மாலை தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்
ஷோபியான் வழக்கு: உடல்களை தோண்டியெடுக்க உத்தரவு
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி