தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலுக்கு செல்லும் யாத்திரை, பஹல்காம் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இன்று ஜம்முவில் இருந்து யாத்ரிகர்கள் புறப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் இருந்து யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று அமர்நாத் கோயில் வாரியம் உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
பஹல்காமில் உள்ள நுன்வான் அடிவார முகாமில் யாத்ரிகர்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், ஜம்முவில் இருந்து புதிய குழுவை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து பலமுறை பனிப்பொழிவு உள்ளிட்ட காரணங்களினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
|