முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் வெட்டர் பாலா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில், 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வனப்பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தீவிரவாதிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சிறிது நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 பேரும் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து அப்பகுதியில் மோதல் நீடித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தீவிரவாதிகள் மறைவிடத்தில் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சித்தூர் அருகே ‌விப‌த்து : பள்ளி குழந்தைகள் 5 பேர் பலி
புதுட‌ெ‌ல்‌லி‌யி‌ல் இ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் பொலிட்பீரோ கூட்டம்
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ. 10,560 கோடி கடனுதவி
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்க அதிமுக கோரிக்கை
மே.வங்க சட்டசபைத் தேர்தலை குறிவைத்து ரயில்வே பட்ஜெட்