ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில் 5 குழந்தைகள் பலியானார்கள்.
சித்தூர் மாவட்டம் கல்லு பள்ளிக்கு இன்று காலை ஆட்டோ ஒன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 குழந்தைகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 10 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |