மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ சிறப்பு கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கேரளாவில் கட்சியின் இரு பெரும் தலைவர்களான மாநில செயலர் பினராயி விஜயனுக்கும், முதலமைச்சர் அச்சுதானந்தனுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டிற்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
சமீபத்தில் ஊழல் குற்றச்சாற்றில் சிக்கிய பினராயி விஜயன் மாநில செயலர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று அச்சுதானந்தனும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக அச்சுதானந்தன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பினராயி விஜயனும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. |