முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > தேசியச் செய்திகள் > ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ரயில்வே துறை தனியார்மயமாகாது- மம்தா
மேற்கு வங்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் விமர்சனத்தை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.

ஒட்டுமொத்த இந்தியாவையும் மனதில் கொண்டு ரயில்வே பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக பெங்காலில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

தாம் நாடு முழுவதற்கும் பணியாற்றுவதாகவும், யாருக்கும் பாதகமாக செயல்படவில்லை என்றும், மற்ற பகுதிகளுக்கு சேவையாற்றி விட்டு மேற்குவங்கத்திற்கு ஏதும் செய்யாவிட்டாலும், மீண்டும் ஏதாவது செய்வேன் என்றார் அவர்.

தனியார் பங்களிப்புடன் சில திட்டங்களை அறிவித்திருப்பதால், தாம் ரயில்வேயை வணிகமயமாக்கவில்லை என்று கூறிய ஆர், புதிய கட்டமைப்புகளை தற்போதைய கட்டமைப்புகளை பாதிக்காத வகையில் மேற்கொள்வதற்காக அதுபோன்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார்.

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படாது என்றும், ரயில்வே ஊழியர்களை பாதுகாக்க வேண்டியது தமது கடமை என்றும் அவர் கூறினார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
நீதிபதியை மிரட்டிய மத்திய அமைச்சரை நீக்க அதிமுக கோரிக்கை
மே.வங்க சட்டசபைத் தேர்தலை குறிவைத்து ரயில்வே பட்ஜெட்
லால்காருக்குள் நுழைய முயன்ற மேதா பட்கர் கைது
மம்தாவுக்கு பிரதமர் பாராட்டு
விமான கோளாறு: கேரள முதல்வர், அமைச்சர்கள் உயிர் தப்பினர்
சென்னை-மதுரை உட்பட 57 புதிய ரயில்கள்