போலி மதிப்பெண் பட்டியல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியை மிரட்டியதாகக் கூறப்படும் மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவையில் அஇஅதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுதொடர்பாக மக்களவையில் இன்று கேள்விநேரத்தின் போது பேசிய அஇஅதிமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம். தம்பிதுரை, மத்திய அமைச்சர் மீதான புகார் குறித்து விரிவான அறிக்கையை பெற பிரதமர் மன்மோகன் சிங் சட்ட அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிடுமாறு தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
மத்திய அமைச்சரின் இந்த செயல் நீதித்துறை விவகாரங்களில் தலையிடுவதாக அமையும் என்று குறிப்பிட்ட தம்பிதுரை, இது நியாயமற்றது என்றும், இதுபோன்ற செயலுக்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
|