மேற்குவங்க மாநிலம் லால்காருக்குள் தடை உத்தரவை மீறி நுழைய முயன்ற மனித உரிமைகள் ஆர்வலர்கள் மேதா பட்கர், கோபால் மேனன் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
தேப்ரா என்ற இடத்தில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோபால் மேனன் உள்ளிட்ட சிலரை காவல்துறையினர் அடித்ததாக அவர்கள் குற்றம்சாற்றினர்.
லால்காரில் இருந்து 80 கி.மீ.-க்கு முன் தேப்ராவில் தாம் கைது செய்யப்பட்டதாக மேதா பட்கர் தெரிவித்தார்.
தங்களை கைது செய்ய எவ்வித நியாயமும் இல்லை என்றார் அவர்.
கைது செய்ததோடு மட்டுமல்லாமல், சிலரை காவல்துறையினர் அடித்துள்ளதாகவும், ஜனநாயக நாட்டில் சுதந்திரமாக செல்வதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என்றும் மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.
பட்கர் உட்பட மொத்தம் 11 பேரைக் கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
|